ஒரு கிறிஸ்தவ வாழ்வின் வெற்றி இரகசியம்

கிறிஸ்துவின் வெற்றி மாதிரி

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.  1 பேதுரு 2: 21

                    ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும்  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வெற்றியாய் வாழும்படிக்கு ஒரு மாதிரியை பின்வைத்துப் போயிருக்கிறார். அந்த மாதிரியைத்தான் பரிசுத்த வேதாகமத்தின் சுவிசேஷ எழுத்தாளர்கள் தூய ஆவியானவராலே நமக்காக எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

                         அதை பின்பற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் இவ்வுலகில் தன்னுடைய வாழ்க்கையை வெற்றியாய் வாழ முடியுமென்று நான் நினைக்கிறேன்.  இந்த வசனம் சிலுவைப் பாடுகளை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டதென்றாலும், கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த ஒவ்வொரு நேரமுமே நமக்கு ஒரு சிறிந்த மாதிரி வாழ்வு என்பதே வேதம் சொல்லும் உண்மை. உலகின் எல்லா பிரசனைகளுக்கும் பரிசுத்த வேதாகமே பதில் என்று பரிசுத்தவான்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையே அந்த பதில்.

                        சுவிசேஷம் கிறிஸ்துவின் வாழ்க்கையிலிருந்து நமக்கு கற்றுத் தரும் காரியங்களை அல்லது கிறிஸ்துவின் வாழ்க்கையை பற்றியதான பார்வையை மூன்று தலைப்புகளில் கூற விரும்புகிறேன். அவர் எப்படி உலகத்தையும அதன் மனிதர்களையும் பார்த்தாரோ அப்படியே ஒரு கிறிஸ்தவனின் பார்வையும் அமையும்போது கிறிஸ்தவ வாழ்வு மிக எளிதாகிறது.

கிறிஸ்துவின் பார்வை

சராசரி மனிதனின் பார்வை

மக்களுக்கானது

சுயநலமானது

ராஜ்யத்திற்கானது

உலகத்திற்கானது

தேவ நாம மகிமைக்கானது

சொந்த மகிமைக்கானது

 

கிறிஸ்து எப்பொழுதுமே மக்களை பார்த்த பார்வை கீழ்கண்ட வசனங்களில் தெளிவு படுத்தப்படுகிறது.

Mat 9:35 பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.

Mat 9:36 அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி…. 

இப்படிப்பட்ட பார்வை ஒரு கிறிஸ்தவனுக்கு வரும்போது வாழ்க்கை மாறுகிறது. கிறிஸ்துவைப் போன்ற பார்வை கிறிஸ்து பெற்ற ஜெயத்தை நமக்கும் தருகிறது.. இக்காரியங்களை தொடர்ந்து தியானியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக…..

இதன் தொடர்ச்சியை வரும் நாட்களில் காண்போம்..

About the author

Ps. Ruban Charlas

The founder Pastor.J.Ruban charlas hails from a very humble family with strong Christian ethics. As he was yet comprehended God’s call on his life, through a supernatural physical miracle God revealed His heavenly call and confirmed it through many signs. After training of leaders and establishing more than 25 churches in the unreached areas, by the specific guidance from the Lord, he pioneered “Adonai New Life Worship Centre” in the southern part of Chennai the headquarters of Tamil Nadu, India

View all posts