என்றென்றும் நம்முடன் இருக்கும் ஆண்டவர்

ஏசாயா 43:1-2.

ஏசாயா 43:1-2. இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்.தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.

அவர் நம்மை

  • சிருஷ்டித்தவர் (creator)
  • உருவாக்கினவர் (form or mould)
  • மீட்டுக் கொண்டவர் (redeem)
  • பேர் சொல்லி அழைத்தவர் (called us by our name)
  • தமக்குச் சொந்தமாய் மாற்றிக்கொண்டவர். (make us His own)

எவ்வளவு நல்ல ஆண்டவர் நமக்கு உண்டு. இந்த ஆண்டவர் நம்மை சிருஷ்டித்ததோடு நின்றுவிடவில்லை. நம்முடைய கடைசி வரையும் நம்மை நடத்துகிறவர்.  இவ்வுலகிலேயே நம்மை அவருக்குச் சொந்தமாய் மாற்றிக் கொண்டவர், மறுமையிலும் அவரோடு வாழும்படி விரும்புகிற ஆண்டவர்.

இந்த தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதிலே அவருக்கு அதிக அக்கறையுண்டு. இதைக் குறித்து எப்போதாவது யோசித்தது உண்டா? அவரோடு நாம் இருப்பதினாலே அவருக்கு என்ன லாபம். நமக்கு பெரும் லாபம் உண்டு. அந்த வேதனை நிறைந்த அக்கினிகடலில், பிசாசோடும் அவனுடைய தூதர்களோடும் அந்த வேதனையில் பங்கடையாமல், மகிழ்ச்சி நிறைந்த அந்த பரலோக நாட்டினிலே வாழ்வது நமக்கு மகிழ்ச்சிதான்.

ஆம் இந்த தேவனுடைய விருப்பம் நமக்கு பெரும் லாபம் தான். ஆனால் அவருக்கு என்ன லாபம்? நாம் குறைவற்றவுள்ளவர்கள், எந்த விதத்திலும் ஆண்டவருக்கு முன் நிற்க தகுதியில்லாதவர்கள். பெலவீனமானவர்கள், அருவருக்கப்படத் தக்கவர்கள். ஆனாலும் நம்மை தகுதிப்படுத்தவும், அவரோடு கூட வைத்துக் கொள்ளவும், தம்மையே நமக்காகத் தந்தாரே, அதைத் தான் அவருடைய கிருபை என்று சொல்லுகிறோம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபைதான், அவர் நம்மை தேடி இப்பூமிக்கு வர வைத்தது. நம்மை தேடி கண்டுபிடிக்க வைத்தது, அவர் பெயரை நமக்கு தந்தது, பரலோகம் சென்று அவரோடு வாழும் வரையில் நம்மை பாதுகாக்கிறது.

     இயேசு உலகில் வாழ்ந்த அந்த நாட்களில் இப்படிச் சொன்னார், “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.” (மத்தேயு 28:20). அவர் வாக்குத் தவறாத தேவன். அவர் சொன்னதைச் செய்கிறவர். கூட இருப்பேன் என்றால் அவர் இருப்பார், இருக்கிறார். நாம் சூழ்நிலைகளின் அடிப்படையில் வேதவசனங்களை விசுவாசிக்க முயற்சிக்கிறோம். ஆனால் அவர் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்ட தேவன் அவர் நம்மோடு எந்தச் சூழ்நிலையிலும் இருப்பார்.

     எந்தெந்த சூழ்நிலைகளிலெல்லாம் நம்மோடு இருப்பாராம். ஏசாயா புஸ்தகத்தின் 43ஆம் அதிகாரத்தின் இரண்டாம் வசனம் சொல்லுகிறது. எதிர்மறையான சூழ்நிலைகளிலும் அவர் நம்மோடு இருப்பவராம். சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் மட்டுமே மனிதர் நம்மோடு இருப்பார்கள். இந்த கொரோனா நாட்கள் அதை நிரூபித்திருக்கிறது. ஆனாலும் ஆண்டவர் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம் அக்கினி எரிந்தாலும், ஆறுகள் புரண்டு ஓடினாலும், அவர் நம்மோடு இருக்கிறவர்.

     நமக்கு ஒரு சந்தேகம் வரலாம் அவர் நம்மோடு கூட இருந்தால் ஏன் இவைகள் நமக்கு வரவேண்டும்? ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உபத்திரவங்களோ அல்லது பாடுகளோ இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையை வேதாகமம் நமக்கு வாக்குப் பண்ணவில்லை, பாடுகள் நமக்கு வந்தாலும் அவைகள் மத்தியில் நம்மை விடுவிக்கிறவர் நம்மோடு கூடவே இருக்கிறார் என்பதே நமக்கு இருக்கும் வாக்குத்தத்தம். 

     பாடுகளும், உபத்திரவங்களும், நமக்கு தரும் சில காரியங்கள்:

     1. நம்முடைய பலம் அல்லது நம் பலவீனங்கள் என்ன என்பதை இச்சூழ்நிலைகள் தான் வெளிப்படுத்துகிறது. (Reveals our strength and weakness )

2. பாடுகளும் உபத்திரவங்களும் நம் குணங்களையும், ஆவிக்குரிய பெலனையும் வெளிப்படுத்துகிறது. (Reveals our real character and our Spiritual strength)

3. பாடுகளும் உபத்திரவங்களும் நம்முடைய சூழ்நிலையையும். கூட இருக்கும் நபர்களைப் பற்றியும் வெளிப்படுத்துகிறது. (Reveals our atmosphere and relationships)

4. பாடுகளும் உபத்திரவங்களும் நம்மை உறுதியாக்குகிறது. (Makes us Strong)

5. பாடுகளும் உபத்திரவங்களும் நம் பாதைகளை சோதித்துப் பார்க்க உதவுகிறது. (Helps us to check our ways)

6 பாடுகளும் உபத்திரவங்களும் தேவனை சார்ந்துகொள்ள வழிநடத்துகிறது. (Makes us dependent of God)

7 பாடுகளும் உபத்திரவங்களும் நமக்கு தேவனிடமிருந்து கனத்தையும், மகிமையையும், புதிய நன்மைகளையும் கொண்டுவருகிறது. (Brings us much Honour and Glory from the Lord)

     பாடுகளையும் போராட்டங்களையும் அலட்சியப் படுத்தாதீர்கள். அவைகளிலிருந்து நன்மை பெற்றுக் கொள்ள ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வாராக, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

About the author

Ps. Ruban Charlas

The founder Pastor.J.Ruban charlas hails from a very humble family with strong Christian ethics. As he was yet comprehended God’s call on his life, through a supernatural physical miracle God revealed His heavenly call and confirmed it through many signs. After training of leaders and establishing more than 25 churches in the unreached areas, by the specific guidance from the Lord, he pioneered “Adonai New Life Worship Centre” in the southern part of Chennai the headquarters of Tamil Nadu, India

View all posts

6 Comments